\
அதிமுக செயற்குழு கூட்டம் : கருணாநிதி இரங்கல்

அதிமுக செயற்குழு கூட்டம் : கருணாநிதி இரங்கல்

அதிமுக செயற்குழு கூட்டம் : கருணாநிதி இரங்கல்
Published on: 

அதிமுகவின் செயற்குழுக் கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று அவைத்தலைவர் மதுசூதணன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தின்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் மறைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் போஸ் மற்றும் கேரள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதவிர ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கையை பாராட்டியும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com