தவெக தலைவர் விஜயை தாக்கி பேசிய செல்லூர் ராஜூ
தவெக தலைவர் விஜயை தாக்கி பேசிய செல்லூர் ராஜூpt

’விஜய் வாயிலையே வடை சுடுகிறார்; இந்த கட்சியெல்லாம் இருக்குமா? என்பதே சந்தேகம்’ - செல்லூர் ராஜூ

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வாக்கு இருப்பதாஅக் விஜய் வாயிலையே வடை சுடுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
Published on
Summary

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், விஜய் தலைமையில் முதன்முறையாக தேர்தலை சந்திக்க காத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, விஜயை கடுமையாக விமர்சித்து, 'விஜய் வாயிலையே வடை சுடுகிறார்' என கூறியுள்ளார். விஜயின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் நிலை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் முழுவீச்சாக ஈடுபட்டு வருகின்றன.

ஒருபக்கம் கட்சிக் கூட்டணி குறித்த அறிவிப்பு, மறுபக்கம் தேர்தல் அறிக்கைகள் சார்ந்த அறிவிப்பு என தமிழக அரசியல் களம் சூடிபிடித்திருக்கும் நிலையில், விஜய் தலைமையில் முதன்முறையாக தேர்தலை சந்திக்க காத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt

இந்தசூழலில் கரூர் துயரம் தவெகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், தவெக தலைவர் விஜயும் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக நேரடியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். அதனுடன் சேர்ந்து ஜனநாயகன் பட வெளியீட்டில் பிரச்னை, கரூர் துயரத்தில் சிபிஐ விசாரணை என தவெக பல சிக்கல்களை சந்தித்து வந்தாலும், தவெகவிற்கு நினைத்தது போலவே விசில் சின்னம் கிடைத்திருப்பது அவர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுகவை விஜய் விமர்சித்திருந்த நிலையில், அதிமுக நேரடியாக விஜயை தாக்கி விமர்சித்து பதிவிட்டிருந்தது. இந்தசூழலில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுவும் விஜயை விமர்சித்துள்ளார்.

தவெக தலைவர் விஜயை தாக்கி பேசிய செல்லூர் ராஜூ
ஜனநாயகப் போர்| வேலுநாச்சியார் குறித்து குட்டிக்கதை.. சூசகமாக விஜய் சொன்ன விசயம்?

விஜய் வாயிலையே வடை சுடுகிறார்..

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘நடிகர் என்ற முகத்தை வைத்து மக்களை ஏமாற்றி விடுவோம் என வந்துவிட்டனர். முகத்தை பார்ப்பதற்கு தான் மக்கள் கூட்டம் கூடுகிறார்கள், பின்னர் கைதட்டி விட்டு சென்று விடுவார்கள். அரசியலில் நிரந்தர வெளிச்சம் கொடுக்க வேண்டும் என்றால் கட்டமைப்பு வேண்டும்.

உச்சக்கட்ட நடிகர் இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறார், அவர் படம் எடுத்து இவ்வளவு பேர் தெருவிற்கு வந்துள்ளனர். அரசியலுக்கு புதுமுகம் வருகிறார் என நினைத்தேன்..இப்போது விஜய் எங்களுடைய காலையே கடித்துள்ளார். கரூரில் இறந்தவர்களின் உறவினர்களை வீட்டுக்கு அழைத்து வந்து ஆறுதல் தெரிவிப்பது புதுவிதமாக உள்ளது. களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும்.. அனைவரையும் இழிவாக பேசுவது தேவையில்லாதது” என விமர்சித்தார்.

மேலும், குடும்பத்தில் ஒரு ஓட்டு உள்ளது என விஜய் சொன்னது வாயிலேயே வடை சுடுவது போல் உள்ளது. எத்தனை வீட்டில் போய் விஜய் கணக்கெடுத்தார்.. சும்மா சொல்வது தான். முதலில் இந்த கட்சியில் இருக்குமா? என்று நினைக்கிறீர்களா, எனக்கெனவோ சந்தேகம் தான். எங்களுக்கு எதிரி திமுக தான்.. வேற யாரும் கிடையாது என்று பேசினார்.

தவெக தலைவர் விஜயை தாக்கி பேசிய செல்லூர் ராஜூ
இரட்டை இலக்கத்தில் தொகுதி பட்டியலிட்ட மநீம.. அடுத்த நாளே கமலை சந்தித்த திமுக அமைச்சர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com