முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனை ரத்து

பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாலகிருஷ்ண ரெட்டி
பாலகிருஷ்ண ரெட்டிFacebook

பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1998-ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் 2019-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால், பாலகிருஷ்ண ரெட்டி அப்போது அமைச்சர் பதவியை இழந்தார். சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.

பாலகிருஷ்ண ரெட்டி
ஒன்றிய அரசு என குறிப்பிட்டு பேசிய விஜய்...!

காவல் துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாகவும், உண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை அரசுத்தரப்பு கண்டறியவில்லை எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும் பலவீனமான ஆதாரங்களே உள்ளதாகவும், அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை எனவும் கூறி தண்டனையை ரத்து செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com