புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்ட விழாவில் அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அரசு பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். அதன்பின் திருமயம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி உரையாற்ற வேண்டும் என அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டத்தில், ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அங்கிருந்த சிலர் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த புதிய தலைமுறை செய்தியாளரை படம் எடுக்ககூடாது என மிரட்டல் விடுத்து, அவரிடமிருந்து கேமராவை பிடுங்க முயற்சித்தனர். மோதலை அடுத்து திருமயம் முழுவதும் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.