எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிpt web

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... என்ன பேச போகிறார் இபிஎஸ்?

4ஆம் கட்ட பயணத்தை வரும் 1ஆம் தேதி முதல் இபிஎஸ் தொடங்க உள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 30) அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
Published on
Summary

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

eps campaign on temple free land scheme
எடப்பாடி பழனிசாமிpt

அடுத்தாண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான பரப்புரை பயணங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ஜூலை மாதமே தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கிவிட்ட பழனிசாமி, மூன்று கட்ட சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ளார். 4ஆம் கட்ட பயணத்தை வரும் 1ஆம் தேதி முதல் அவர் தொடங்க உள்ள நிலையில், இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி சர்ச்சை கருத்து: அதிமுக கூட்டத்தில் ஆம்புலன்ஸ் தாக்குதல்.., மக்களின் பார்வையில் !

இதுதொடர்பாக அதிமுக கட்சியின் தலைமை வெளியிட்டிருந்த அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில், 30.8.2025 – சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..

எடப்பாடி பழனிசாமி
விஜயகாந்தை விஜய் சொந்தம் கொண்டாடுவதா? பிரேமலதா விஜயகாந்த் கருத்து

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com