மக்களவைத் தேர்தலை முதல் கட்டத்திலேயே நடத்த அதிமுக கோரிக்கை
மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்த அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயராகி வருகின்றன. கூட்டணி பேச்சு வார்த்தைகளும் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. அதேபோல தேர்தலை எந்தவித பிரச்னையுமின்றி நடத்தி முடிக்க தேர்தல் ஆணையமும் வேலைகளை செய்து வருகிறது. பொதுவாக மக்களவைத் தேர்தல் பல கட்டங்களாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்த அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்.பி.க்களான தம்பிதுரை, வேணுகோபால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் இதுதொடர்பான மனுக்களை அளித்துள்ளனர். குடிநீர் பிரச்னையை காரணம் காட்டி தமிழகத்திற்கு முதல் கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.