மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல், வருகிற 18-ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையில் தற்போதுள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், அதிமுக மற்றும் திமுக சார்பில் தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.

இந்நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி முன்னாள் அமைச்சர் முஹம்மத் ஜான், மேட்டூர் நகர செயலாளர் எஸ்.சந்திரசேகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கூட்டணி கட்சியான பாமகவிற்கு அதிமுக ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com