+2வில் 100 மதிப்பெண் பெற மாணவர்களுக்கு அதிமுக-வினர் வாழ்த்து

+2வில் 100 மதிப்பெண் பெற மாணவர்களுக்கு அதிமுக-வினர் வாழ்த்து
Published on

தமிழகம் முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியுள்ள நிலையில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களோடு வெற்றி பெற வாழ்த்து தெரிவிப்பதாக மதுரை மாநகர் முழுவதும் அதிமுக-வினர் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பொதுவாக பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ-மாணவிகள் 200 மதிப்பெண்களுக்கு தான் ஒரு பாடத்திற்கு தேர்வு எழுதுவார்கள். அப்படியிருக்க நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற அதிமுக-வினர் வாழ்த்து தெரிவித்தது, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் எத்தனை மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுவார்கள் என்பது தெரியாமல் அதிமுக-வினர் போஸ்டர் ஒட்டியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com