சீனாவுக்குப்பிறகு முதன்முறையாக ஆசியாவில் தமிழகத்தில் தடம் பதிக்கிறது Adidas!!

சீனாவுக்குப்பிறகு முதன்முறையாக தமிழகத்தில் தடம் பதிக்கிறது 'Adidas' நிறுவனம். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தாக உள்ளது.
Adidas, tamilnadu gov.
Adidas, tamilnadu gov.twitter

தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றும் தொழில் துறையின் வளர்ச்சிக்கு ஏதுவாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக மாவட்டந்தோறும் முதலீட்டாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகளை தமிழ்நாடு தொழில்துறை மேற்கொண்டு வருகிறது. மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் தொழில்துறை செயலாளர் அருண்ராய் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், தைவான் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. தொழில்துறை சார்ந்த முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 'தொழில் வழிகாட்டி மையம்' மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. 'Adidas' நிறுவனம் சீனாவுக்கு பிறகு முதல்முறையாக தமிழகத்தில் தடம்பதிக்க உள்ளது, இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாக உள்ளது.

மேலும், ஜெர்மனியைச் சேர்ந்த அடிடாஸ் நிறுவனம், தனது Global capacity center-ஐ சென்னையில் அமைக்க திட்டமிட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே ஆசியாவில் அமையும் முதல் மையம் இதுவாகும். மேலும், வியட்நாம் நாட்டைச் சேர்ந்த Vinfast என்ற மின்சார வாகனம் உற்பத்தி செய்யும் நிறுவனம் தூத்துக்குடியில் மின்வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்புத் தொழிற்சாலையை 400 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்த உள்ளது.

இதுகுறித்த மேலும் செய்திகளை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com