17 பேர் உயிரிழக்க காரணமான சுற்றுச்சுவர்: பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ்

17 பேர் உயிரிழக்க காரணமான சுற்றுச்சுவர்: பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ்
17 பேர் உயிரிழக்க காரணமான சுற்றுச்சுவர்: பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ்

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியாக காரணமாக இருந்த சுற்றுச்சுவர் மீண்டும் கட்டப்பட்டது குறித்து பதிலளிக்க பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் நடூர் பகுதி ஆதிதிராவிடன் காலனியில் தனியாருக்கு சொந்தமான சுற்றுச்சுவர் சரிந்து அருகில் இருந்த 5 வீடுகளின் மீது விழுந்தது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு அதேபகுதியில் மீண்டும் சுவர் கட்டப்பட்டது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. கடந்த 2-ஆம் தேதி ஒரு வருட நினைவஞ்சலி செலுத்தும்போது இந்த சுவர் அகற்றப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. மீண்டும் மண் அரிப்பு ஏற்படாத வகையில், கான்கிரீட் சுவர் கட்டப்பட்டுள்ளதாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து இதுகுறித்து பட்டியலினத்தோர் ஆணையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில், சுற்றுச்சுவர் மீண்டும் கட்டப்பட்டது குறித்து பதிலளிக்க பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் 15 நாட்களில் பதில் அளிக்கக்கோரி தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com