”கூடுதல் பேருந்துகளை இயக்குங்கள்” .. ஆரணி அருகே படியில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள்!

”கூடுதல் பேருந்துகளை இயக்குங்கள்” .. ஆரணி அருகே படியில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள்!
”கூடுதல் பேருந்துகளை இயக்குங்கள்” .. ஆரணி அருகே படியில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள்!

ஆரணி அருகே பள்ளி கல்லூரி நேரங்களில் பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் மற்றும் கொங்கராம்பட்டு ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து தினமும் பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள், வேலூர் மாநகருக்கு பேருந்தில் சென்று திரும்புவது வழக்கம்.

அவ்வாறு செல்லும் மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், படியில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்களில் ஒருசிலர் கீழே விழுந்து அடிக்கடி காயமடைகின்றனர்.

இதனால் பள்ளி கல்லூரி நேரங்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர்களும் பொது மக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com