\
எடப்பாடியை சந்தித்தார் நடிகை வரலட்சுமி!

எடப்பாடியை சந்தித்தார் நடிகை வரலட்சுமி!

எடப்பாடியை சந்தித்தார் நடிகை வரலட்சுமி!
Published on

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகை வரலட்சுமி இன்று காலை திடீரென சந்தித்தார்.

தமிழில், போடா போடி, தாரை தப்பட்டை படங்களில் ஹீரோயினாக நடித்தவர் வரலட்சுமி. நடிகர் சரத்குமாரின் மகளான இவர், வேவ் சக்தி என்ற பெண்கள் பாதுகாப்பு அமைப்பை தொடங்கியுள்ளார். இந்த அமைப்பு நடிகைகள் மட்டுமின்றி பாலியல் தொல்லைக்கு ஆளாகும் அனைத்து பெண்களுக்கும் உதவும் என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் வரலட்சுமி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று காலை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வரலட்சுமி, பாலியல் வன்கொடுமைகளால் பெண்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மாவட்டம் தோறும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 6 மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தக் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com