Vijay Vanitha
Vijay Vanithapt desk

“விஜய் அரசியலில் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்” - நடிகை வனிதா விஜயகுமார்

விஜய் அரசியலில் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்தார்.
Published on

செய்தியாளர்: ந.காதர்உசேன்

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் இன்று சதய விழா கொண்டாடப்படும் நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் அங்கு இன்று சுவாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “முதன்முறையாக தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உதயநிதி - விஜய்
உதயநிதி - விஜய்முகநூல்

விஜய் அரசியலில் புதிய பரிணாமம் எடுத்துள்ளார். விஜய் மிகப் பெரிய வெற்றியை அடையணும். விஜயும் - உதயநிதியும் அரசியலில் எதிரி என்பது சரிதான். விஜய் - உதயநிதி இருவருமே எனக்கு நண்பர்கள். நல்ல தமிழகம் அமைவதற்கு யார் வந்தாலும் நான் ஆதரிப்பேன்” என்றார்.

Vijay Vanitha
“உங்க கூட்டணி அவ்வளவு பலவீனமாவா இருக்கு?”- விசிக தலைவர் திருமாவளவனுக்கு பத்திரிகையாளர் மணி கேள்வி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com