“பிரிந்தது வெறும் உடல் தான்”- கணவர் மறைவு குறித்து சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா

“உங்களின் பிரார்த்தனைகள், வார்த்தைகள், இருப்பு, என் வீடு போன்றவை எனக்கும் என் குடும்பத்துக்கும் பெரும் நம்பிக்கையை கொடுத்துவருகிறது. உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி” - ஸ்ருதி சண்முகப்பிரியா.
Arvind shekar - Sruthi Shanmuga priya
Arvind shekar - Sruthi Shanmuga priyaInstagram

சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர், மாரடைப்பால் மரணித்துள்ளார் என நேற்று செய்திகள் வெளியாகின. டயட், அன்றாடம் வொர்க்-அவுட், ஜிம் ட்ரெய்னிங் என உடல்நலனில் மிக மிக கவனமாக இருந்து வந்தவர் அரவிந்த். கடந்த ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தையும் பெற்றவர் அரவிந்த். ‘இவ்வளவு ஹெல்த் கான்ஷியஸாக இருந்தவர், மாரடைப்பால் மரணித்துள்ளார்’ என்பது, சின்னத்திரை வட்டாரத்தை மட்டுமன்றி இணையவாசிகளையும்கூட அச்சத்துக்குள்ளாக்கியது.

நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா, நாதஸ்வரம் – பொன்னூஞ்சல் – வாணி ராணி – கல்யாண பரிசு - பாரதி கண்ணம்மா போன்ற சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இவருக்கு கடந்த வருடம் ஜிம் ட்ரெய்னரான அரவிந்த் சேகர் என்பவருடன் திருமணம் நடந்திருந்தது. ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் இந்த இணையர் தங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். Arranged Marriage செய்த இவர்கள், அத்தனை காதலோடு இன்ஸ்டாவில் இன்ஃப்ளுயென்சர்களாகவும் இருந்துவந்தனர். இப்போதும் ரீல்ஸ் மற்றும் ப்ரமோஷன்ஸ்களால் நிறைந்துள்ளது இவர்களின் இன்ஸ்டா பக்கங்கள்.

கடந்த வாரம் அரவிந்த் தன்னுடைய இன்ஸ்டாவில், மனைவி ஸ்ருதியுடன் தான் மேற்கொண்டிருந்த பாரிஸ் பயணத்தை ரீல்ஸாக பகிர்ந்திருந்தார். அதில் கேப்ஷனாக, “நல்ல நினைவுகளுடன் இறக்க வேண்டும். நிறைவேறாத ஆசைகளுடன் அல்ல” என குறிப்பிட்டிருந்தார் அவர்.

அதேபோல ஸ்ருதியும் அரவிந்துடன் இருக்கும் வீடியோவொன்றை கடந்த வாரம்கூட பகிர்ந்திருந்தார். இப்படியான அடுத்தடுத்த வீடியோக்களால், இணையத்தில் 'சூப்பர் கூல்' இணையர்களாகளாகவும் அறியப்பட்டனர் . இதனால் அரவிந்த்தின் இறப்பானது இவர்களின் ரசிகர்கள், ஃபாலோயர்ஸ் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரவிந்த் நேற்று காலை உயிரிழந்த நிலையில், இரவில் தன் இன்ஸ்டா பக்கத்தில் ஸ்ருதி சண்முகப்பிரியா அவர் பற்றி ஒரு நெகிழ்ச்சிப் பதிவை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “பிரிந்தது வெறும் உடல் தான். உங்கள் ஆன்மாவும் மனமும், என்னைச் சூழ்ந்தே எப்போதும் இருக்கிறது. அது என்னை என்றென்றும் பாதுகாக்கும்!

உங்கள் மீதான என் அன்பு இப்போது மேலும் மேலும் அதிகரிக்கிறது. நாம் ஒருவருக்கொருவர் ஏற்கெனவே நிறைய நினைவுகளை வைத்துள்ளோம். அவற்றை நான் என் வாழ்நாள் முழுவதும் கொண்டாடுவேன். உங்களை மிஸ் செய்கிறேன். என் அருகில் உங்கள் இருப்பை இப்போதும் உணர்கிறேன்!” என்றுள்ளார். #loveyouhusband என்ற ஹேஷ்டேகுடன் அவர் பகிர்ந்துள்ள இந்த பதிவின் கீழ், பலரும் ஆறுதல் கூறிவருகின்றனர்.

மேலும் தன் இன்ஸ்டா ஸ்டோரியில் ஸ்ருதி, “உங்களின் (ரசிகர்களின்) பிரார்த்தனைகள், வார்த்தைகள், இருப்பு, என் வீடு ஆகியவை எனக்கும் என் குடும்பத்துக்கும் பெரும் நம்பிக்கையை கொடுத்துவருகிறது. உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து சின்னத்திரை பிரபலங்களும் இணையவாசிகளும் ஸ்ருதிக்கு தைரியம் தெரிவித்துவருகின்றனர்.

மீண்டு வாருங்கள் ஸ்ருதி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com