“தயவு செய்து எனது கணவர் மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்பாதீங்க” - நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா

சின்னத்திரை நடிகை ஸ்ருதியின் கணவர் அரவிந்த் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், கணவர் இறப்பில் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் எனக் கூறி ஸ்ருதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
sruthi
sruthipt web

சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர், மாரடைப்பால் மரணித்துள்ளார் என நேற்று செய்திகள் வெளியாகின. டயட், அன்றாடம் வொர்க்-அவுட், ஜிம் ட்ரெய்னிங் என உடல்நலனில் மிக மிக கவனமாக இருந்து வந்தவர் அரவிந்த். கடந்த ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தையும் பெற்றவர் அரவிந்த். ‘இவ்வளவு ஹெல்த் கான்ஷியஸாக இருந்தவர், மாரடைப்பால் மரணித்துள்ளார்’ என்பது, சின்னத்திரை வட்டாரத்தை தாண்டி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரவிந்த் நேற்று காலை உயிரிழந்த நிலையில், இரவில் தன் இன்ஸ்டா பக்கத்தில் ஸ்ருதி சண்முகப்பிரியா அவர் பற்றி ஒரு நெகிழ்ச்சிப் பதிவை பகிர்ந்து இருந்தார். அதில் அவர், “பிரிந்தது வெறும் உடல் தான். உங்கள் ஆன்மாவும் மனமும், என்னைச் சூழ்ந்தே எப்போதும் இருக்கிறது. அது என்னை என்றென்றும் பாதுகாக்கும்!

உங்கள் மீதான என் அன்பு இப்போது மேலும் மேலும் அதிகரிக்கிறது. நாம் ஒருவருக்கொருவர் ஏற்கெனவே நிறைய நினைவுகளை வைத்துள்ளோம். அவற்றை நான் என் வாழ்நாள் முழுவதும் கொண்டாடுவேன். உங்களை மிஸ் செய்கிறேன். என் அருகில் உங்கள் இருப்பை இப்போதும் உணர்கிறேன்!” என்று கூறியிருந்தார்.

#loveyouhusband என்ற ஹேஷ்டேகுடன் அவர் பகிர்ந்துள்ள இந்த பதிவின் கீழ், பலரும் ஆறுதல் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், தன்னுடைய கணவர் மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று தன் இன்ஸ்டா பக்கத்தில் ஸ்ருதி சண்முகப்பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த தனது இன்ஸ்டா பதிவில், “அரவிந்த் இறப்பில் என்னோடு துணை நின்ற அனைவருக்கும் நன்றி. அவர் என்னோடு எப்போதும் இருப்பார். எப்பவும் விட்டு போக மாட்டார். என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். நான் சொல்லும் தகவல்களை எடுத்துக் கொள்ளுங்கள். தெரியாத விஷயங்களை பேசிக் கொண்டிருப்பதால் வீட்டில் உள்ளவர்கள் மனம் புண்பட்டிருக்கிறார்கள்.

மரடைப்பால் இறந்துவிட்டார். அவரது இழப்பை தாண்டி மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். அவர் ஒரு பாடி பில்டர், ட்ரெய்னர், ஜிம்மில் ஒர்க் அவுட் பண்ணிட்டு இருக்கும் போது இறந்துவிட்டார் என்பது போன்ற காரணங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஒரு சிவில் என் ஜினியர். ஃபேஷனேட் பிட்னர் என்துசியாசிஸ். ஆனால், மாரைப்பு வந்து இறந்துவிட்டார். அதை தாங்கிக் கொண்டு அடுத்து நடக்க வேண்டிய விஷயங்களை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எந்த தவறான தகவலையும் தேவையில்லாமல் பரப்ப வேண்டாம். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் வயதானவர்கள். அவர்களுக்கு நாங்கள்தான் வலிமை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தயவு செய்து சூழ்நிலையை புரிஞ்சு நடந்துக்கோங்க” கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com