Actress ShobanaFile Image
தமிழ்நாடு
”இங்கயே வேல செய்யட்டும் ஆனா..” வீட்டிலிருந்து ரூ.40,000 திருடிய பணிப்பெண்; ஷோபனா செய்த அந்த செயல்!
தனது வீட்டில் திருடிய பணிப்பெண் மீது நடவடிக்கை எதுவும் வேண்டாம் என கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக் கொண்டார் நடிகை ஷோபனா.
தனது வீட்டில் பணம் காணாமல் போவது குறித்து நடிகை ஷோபனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது வீட்டில் தங்கி தனது தாயை கவனித்து வந்த பணிப்பெண் விஜயா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனை அடுத்து விஜயாவிடம் மேற்கொண்ட விசாரணையில் 40 ஆயிரம் ரூபாயை சிறுக சிறுக திருடி மகனுக்கு அனுப்பியதை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவர் தன் வீட்டிலேயே தங்கி தொடர்ந்து வேலை செய்யட்டும் என்றும் திருடிய பணத்தை அவரது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்வதாகவும் கூறி நடவடிக்கை வேண்டாம் என ஷோபனா கூறினார்