நடிகை அளித்த புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

நடிகை அளித்த புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
நடிகை அளித்த புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

திருமண ஆசைகாட்டி மோசடி செய்ததாக நடிகை அளித்த புகாரில் பதிவான வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமீன் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை கருவுறச் செய்து ஏமாற்றியதாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், அதிமுக-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என நடிகை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், புகார் அளித்த நடிகையின் ஆட்சேபனை மனுவை ஏற்றுக்கொண்டு, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com