\
ரேவதி
ரேவதிweb

’கல்வியை விடாதீர்கள்.. கேள்வி கேளுங்கள்..’ மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை ரேவதி!

டெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக நடிகை ரேவதி கருத்து தெரிவித்துள்ளார்.
Published on
Summary

நீட் தேர்வு முறைகேடு, மாணவர் போராட்டம், காவல்துறை வன்முறை ஆகிய சூழலில், சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை ரேவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். நீட் குறித்த மாணவர்களின் உரிமை போராட்டம் நியாயமானது என ரேவதி கூறி, Gen Z தலைமுறையின் தைரியத்தையும் கேள்வி கேட்கும் மனப்பாங்கையும் பாராட்டினார்.

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடந்துவரும் இப்போராட்டம் மாணவர்கள், காவல்துறையினர் இடையேயான மோதலாக மாறியது. இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசுதல் போன்ற தாக்குதலால், 6 வயது சிறுவன் உட்பட 100-க்கு மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் டெல்லி மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், டெல்லி மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் நீலம் பண்பாட்டு மையம்  சார்பில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பு நடைபெற்றது. 

ரேவதி
’வேதனை அளிக்கிறது..’ டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு பாஜக மூத்த தலைவர் ஆதரவு.!

இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, நடிகர்கள் கலையரசன், மன்சூர் அலிகான், நடிகைகள் ஆன்ட்ரியா, ரேவதி, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை பேசினர். 

ரேவதி
ரேவதி

அப்போது பேசிய நடிகை ரேவதி, “நீட் தேவையா அல்லது அதை சரிசெய்வதா அல்லது தேவையில்லையா என்ற புரிதல் எனக்கு இல்லை. ஆனால் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தை பார்த்து வருகிறோம். நம் குழந்தைகள் எல்லாம் டில்லியில் தொடர்ந்து போராடி, கெஞ்சுகிறார்கள். நான் டாக்டராக ஆசைப்படுகிறேன், எனக்கு நீட் தடையாக இருக்கிறது, தயவு செய்து அடிக்காதீர்கள் என்று கெஞ்சுகிறார்கள். 

எங்கள் உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம். எங்கள் மருத்துவ கனவுக்காக பாடுபடுகிறோம் என்று சொல்கிறார்கள்.  நல்ல விஷயங்களை எடுத்து பேசும் Gen Z-க்கு ஹெட்ஸ் ஆப். எல்லோரையும் அடிக்க வரும் போது தேசிய கீதம் பாடுகிறார்கள், அமேசிங். எங்கள் தலைமுறை அதை செய்யவில்லை. ஆனால் Gen Z பேசுகிறார்கள். உங்களுக்கு உங்கள் பாதையை வகுக்க தெரியும். கல்வியை விடாதீர்கள்.. கேள்வி கேளுங்கள். கேள்வி கேட்காமல் விடாதீர்கள்.. என்று பேசினார்.

ரேவதி
’இரவில் வீடியோ வெளியிட்ட மோடி..’ அமைச்சரை காப்பாற்றும் முயற்சி என சு.வெங்கடேசன் விமர்சனம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com