பாஜகவில் இருந்து திடீர் விலகல்.. அடுத்தது விஜயின் தவெகவா? - ரஞ்சனா நாச்சியார் சொன்ன பதில் இதுதான்!
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ரஞ்சனா நாச்சியார் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
பாஜகவின் கலை, பண்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளராக இருந்தவர் ரஞ்சனா நாச்சியார். இவர்தான் தற்போது பாஜகவிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
” விடைபெறுகிறேன்.... கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய உங்கள் ரஞ்சனா நாச்சியாராகிய நான் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விடைபெறுகிறேன். அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை நான் இன்றோடு விடுவித்துக் கொள்கிறேன்.” என்று பல விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து அவர் புதியதலைமுறைக்கு தெரிவிக்கையில்,
“ காரணங்கள் நிறைய இருக்கிறது. சிலவற்றை சொல்ல முடியும். சிலவற்றை சொல்ல முடியாது. சில காரணங்களில் முக்கியமானவற்றை தான் இந்த அறிக்கையில் எழுதியிருக்கிறேன். மற்றொரு மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் பாஜக தரப்பு வாதம். மூன்றாவது மொழியாக ஹிந்தி என்று அவர்கள் கூறவில்லை. ஆனால், எல்லாப்பள்ளிகளிலும் அவரவர் விரும்பும் மொழிகளுக்கென்று தனிதனி ஆசிரியர்கள் இருப்பதில்லை.
நிச்சயமாக இந்தி ஆசிரியர்தான் இருப்பார்கள். எனவே, இந்தியை மூன்றாவது மொழியாக எடுக்க நாம் நிர்பந்திக்கப்படுவோம். திணிக்கப்படுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவில் இருந்து திடீரென விலகிய அவர், அடுத்தது விஜயின் தவெகவ? இல்லை வேறு எந்த கட்சியில் சேர போகிறார் என்று கேள்விகள் எழுந்தநிலையில், நடிகை ரஞ்சனா இதற்கு விளக்கமளித்து செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.
இதுகுறித்த தகவலை கீழே இணைக்கப்பட்ட வீடியோவில் காணலாம்.