காஞ்சிபுரம் அத்திவரதரை நடிகை நயன்தாரா தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று பகல் 12 மணியோடு விஐபி, விவிஐபி தரிசனம் நிறுத்தப்பட்டது. 46 ஆம் நாளான இன்று புஷ்பாங்கி சேவையில் அருள்பாலிக்கும் அத்திவரதரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்து வருகின்றனர். இன்று ஆடி கருட சேவை என்பதால் மாலை 5 மணி முதல் 8 மணிவரை தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணியோடு கிழக்கு கோபுர வாயில் மூடப்பட்டு, கோவில் வளாகத்திற்குள் இருக்கும் பக்தர்கள் மட்டும் 5 மணிவரை தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்திவரதர் தரிசனம் நாளையுடன் நிறைவடையும் நிலையில், வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தந்த நயன்தாரா, நள்ளிரவு 1 மணி அளவில் வழிபாடு நடத்தினார். அப்போது, இயக்குநர் விக்னேஷ் சிவனும் உடனிருந்தார். தரிசனத்திற்கு பிறகு, நயன்தாராவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.