\
துணை முதல்வருடன் பயணித்ததில் பெருமை - நடிகை குஷ்பு

துணை முதல்வருடன் பயணித்ததில் பெருமை - நடிகை குஷ்பு

துணை முதல்வருடன் பயணித்ததில் பெருமை - நடிகை குஷ்பு
Published on

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் விமானப் பயணம் மேற்கொண்ட புகைப்படத்தை பாஜக-வைச் சேர்ந்த குஷ்பு பெருமையுடன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து மதுரை செல்லும் விமானத்தில் காலை பயணித்தனர். அதே விமானத்தில் பாஜகவின் நடிகை குஷ்புவும் பயணம் மேற்கொண்டார். அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கத்து இருக்கையில் அமர்ந்து பயணித்த குஷ்பு, அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதற்கு நன்றி தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு, துணை முதல்வருடன் பெருமைமிகு பயணம் மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com