கஸ்தூரியின் ட்விட்.. சூடுப்பிடித்த வலைத்தள சர்ச்சை...

கஸ்தூரியின் ட்விட்.. சூடுப்பிடித்த வலைத்தள சர்ச்சை...
கஸ்தூரியின் ட்விட்.. சூடுப்பிடித்த வலைத்தள சர்ச்சை...

மதுரையில் தீவைத்து எரித்ததால் மாணவி உயிரிழந்தது தொடர்பாக நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.

மதுரை திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டையைச் சேர்ந்த மணிப்பாண்டி, பேச்சியம்மாள் தம்பதியின் மகள் சித்ரா தேவி (14). 9ஆம் வகுப்பு படித்து வந்த இந்தச் சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் (23) காதலிப்பதாக சொல்லி தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார். அத்துடன் கடந்த 14ஆம் தேதி தன்னை காதலிக்க மறுத்ததாக, சிறுமி சித்ரா மீது பெட்ரோல் ஊற்றி எரித்தார். இதில் படுகாயமடைந்த சிறுமி ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் உடலை வாங்க மறுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கஸ்தூரி, “பால் மணம் இன்னும் எஞ்சியிருக்கும் அந்த 13 வயது பிஞ்சு குழந்தையாக பார்க்காமல் குமரியாக பார்த்த கண்களை என்ன செய்யலாம்? சித்திரத்தை சீரழித்த, சித்ராவை எரித்த காமுகனை என்ன செய்தால் தகும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பே சரி என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com