\
நடிகை ரேவதி இயக்கத்தில் கஜோலின் அடுத்த திரைப்படம்

நடிகை ரேவதி இயக்கத்தில் கஜோலின் அடுத்த திரைப்படம்

நடிகை ரேவதி இயக்கத்தில் கஜோலின் அடுத்த திரைப்படம்
Published on

நடிகை, இயக்குநர் என்று பன்முகத்திறமை கொடண்ட நடிகை ரேவதியின் இயக்கத்தில், நடிகை கஜோல் திரைப்படமொன்றில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

நடிகை ரேவதி இதற்கு முன்னர் ‘மித்ர், மை பிரெண்ட்’, ’பிர் மிலேங்கே’, ’கேரளா கஃபே’, ’மும்பை கட்டிங்’உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ள நிலையில், 5 வது படமாக கஜோல் படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார். இப்படத்திற்கு, `சலாம் வெங்கி’ என பெயரிட்டிருக்கின்றனர்.
இன்று படப்பிடிப்பு தொடங்கியிருப்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் ரேவதி.

தனது அப்பதிவில் அவர் ”சொல்லப்பட வேண்டிய ஒரு கதையுடன், செல்ல வேண்டிய ஒரு பாதையில், கொண்டாடப்பட வேண்டிய ஒரு வாழ்க்கையை உங்களுடன் பகிர, எங்கள் பயணத்தை இன்று தொடங்குகிறோம். `சலாம் வெங்கி’, நம்ப இயலாத உண்மைக் கதையாகும். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம். இப்படத்தின் இரு பெரும் துருவங்கள், `பி லிவ் ப்ரோடக்‌ஷன்’ நிறுவனத்தின் சுராஜ் மற்றும் ஷ்ரதா!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தை `பி லிவ் ப்ரொடக்‌ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com