\
கௌதமி
கௌதமிபுதியதலைமுறை

பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த கௌதமிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு - இபிஎஸ் அறிவிப்பு

பாஜகவிலிருந்து விலகி வரும் முக்கியமானவர்களை அதிமுக அரவணைத்து அவர்களுக்கு முக்கியப்பொறுப்பை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Published on

பாஜகவிலிருந்து விலகிய நடிகை கௌதமிக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு துணை செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போல் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த தடா பெரியசாமிக்கு எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளதாக இபிஎஸ் அறிவித்துள்ளார்.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழியில் பிரபலமாக அறியப்பட்ட நடிகை கௌதமி கமலுடன் இணைந்து மக்கள் நீதி மைய்யம் என்ற கட்சியில் முக்கியப்பொறுப்பில் இருந்தார். பிறகு கமலுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அக்கச்சியிலிருந்து விலகி, பாஜக கட்சியில் இணைந்தார். அங்கும் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அண்மையில் பாஜகவிலிருந்தும் விலகி, அதிமுகவில் இணைந்தார்.

தற்பொழுது அதிமுகவில் அவருக்கு முக்கிய பதவியான கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அதே போல் கடலூரைச் சேர்ந்த தடா பெரியசாமி பாஜகவில் இருந்தார். சமீபத்தில் அவரும் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். இவருக்கு எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

பாஜகவிலிருந்து விலகி வரும் முக்கியமானவர்களை அதிமுக அரவணைத்து அவர்களுக்கு முக்கியப்பொறுப்பை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com