\
பாஜக நிர்வாகி ஜெயலட்சுமி கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக புகார்

பாஜக நிர்வாகி ஜெயலட்சுமி கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக புகார்

பாஜக நிர்வாகி ஜெயலட்சுமி கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக புகார்
Published on: 
வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி கந்து வட்டிக்கு பணம் பெற்றுக்கொடுத்து மோசடியில் ஈடுபட்டதாக நடிகையும் பாஜகவைச் சேர்ந்த நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த கீதா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள 9 பேருக்கு வங்கியில் பெற்றதாக கூறி, கடன் தொகை வழங்கியதாக அதில் தெரிவித்துள்ளார். தற்போது கடனுக்கு ஈடான தொகையை கட்டிய பின்னரும், வட்டி மட்டுமே கொடுத்ததாகவும் அசல் பணத்தை தர வேண்டும் எனவும் ஜெயலட்சுமி உள்பட சிலர் மிரட்டுவதாக கூறியுள்ளார்.
வங்கியில் கடன் வாங்கித் தராமல் கந்து வட்டிக்கு ஜெயலட்சுமி வாங்கி கொடுத்தது தெரிய வந்துள்ளதாகவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் அப்பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com