”ஒவ்வொரு செங்கல்லாய் வாழ்க்கையை நகர்த்தியவர்” - விஜயகாந்த் மறைவு குறித்து நடிகர் யூகிசேது உருக்கம்!
விஜயகாந்த் மறைவை அடுத்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு பிரபலங்களும், பொதுமக்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அவரது மறைவு குறித்து நடிகர் யூகி சேது, “ஒவ்வொரு செங்கல்லாய் நகர்த்தி வைத்துத்தான் அவருடைய வாழ்க்கையை நகர்த்தினார். கேப்டனைப் போன்று எந்த யூனிட்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவார். சினிமாவுக்கு ரஜினியையும், அரசியலுக்கு எம்.ஜி.ஆரையும் மனதில் வைத்துக்கொண்டு காய் நகர்த்தினார். அது, அவருக்கு இயற்கையாகவே அமைந்தது. அவரிடம் பொய்யான காய் நகர்த்தல் இல்லை. அது மக்களுக்கும் உண்மையாகவே புரிந்துவிட்டது. ஒரு முக்கிய விஷயம், விஜயகாந்த் என்றால் அவர் உண்மையையே பேசுவார்” என்றார். மேலும், அவர் பேசிய கருத்துகளை முழுவதுமாகக் கேட்க இந்த வீடியோவில் காணலாம்.