கன்னியாகுமரி: மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்

கன்னியாகுமரி: மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்

பகவதியம்மனுக்கு விளக்கேற்றியும் உடல் நலம் வேண்டி மரத்தால் ஆன கை, கால், தலை உருவ பொம்மைகளை காணிக்கையாக படைத்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.
Published on

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் யோகிபாபு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் தொடர்ந்து தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் உவரி பகுதியில் இயக்குனர் சிம்பு தேவர் இயக்கத்தில் புதிய படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரபல காமெடி நடிகர் யோகி பாபு, கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயத்திற்கு வருகை தந்து அம்மனுக்கு பட்டு புடவை சார்த்தி தரிசித்து வழிபாடு நடத்தினார்.

இதையடுத்து பகவதியம்மனுக்கு விளக்கேற்றியும் உடல் நலம் வேண்டி மரத்தால் ஆன கை, கால், தலை உருவ பொம்மைகளை காணிக்கையாக படைத்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com