கலாமின் பிறந்தநாளில் விழிப்புணர்வு: மரக்கன்றுகளை நட்டார் நடிகர் விவேக்

கலாமின் பிறந்தநாளில் விழிப்புணர்வு: மரக்கன்றுகளை நட்டார் நடிகர் விவேக்

கலாமின் பிறந்தநாளில் விழிப்புணர்வு: மரக்கன்றுகளை நட்டார் நடிகர் விவேக்
Published on

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் 86-வது பிறந்த நாளையொட்டி சென்னையில் 86 இடங்களில் மரக்கன்றுகளை நடிகர் விவேக் நட்டு வருகிறார்.

ஏவுகணை நாயகன், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 86-ஆவது பிறந்த நாள் இன்று. இதனையொட்டி மரக்கன்றுகள் நடுவதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சென்னையில் 86 இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வருகிறார் நடிகர் விவேக். மரம் நடும் விழாவினை ராமபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இல்லத்தில் துவங்கிய விவேக், அதனைத்தொடர்ந்து நெசப்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், அப்துல்கலாமின் வார்த்தைக்கு இணங்க தமிழகத்தில் இதுவரை 28 லட்சத்து 90 ஆயிரம் மரகன்றுகள் நட்டுள்ளதாக தெரிவித்தார் .வர்தா புயலில் இழந்த மரங்களை நட்டு, அதனையும் மீட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com