"வங்கிக்கடன் கேட்டிருக்கோம்.. கெடச்சதும் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும்" - நடிகர் விஷால்

தங்களது பதவிக்காலம் முடிவதற்குள் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும் என்று கூறியுள்ளார் நடிகர் விஷால்.

விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோயிலில் இருந்து வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

NGMPC22 - 158

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “நாளை எனது ‘மார்க் ஆண்டனி’ படம் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. அனைத்து ஏற்பாடுகளையும் படக்குழு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள நிலையில், இறுதியாக கடவுளின் ஆசீர்வாதத்திற்காக ஏழுமலையானை தரிசனம் செய்தேன்” என்றார்.

vishal
நேரில் ஆஜரான நடிகர் விஷால்.. உயர்நீதிமன்றம் எடுத்த முடிவு! எந்த வழக்கு தெரியுமா?
NGMPC22 - 158

தொடர்ந்து, “நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக வங்கி கடன் கோரப்பட்டுள்ளது. அந்த கடன் கிடைத்த உடன், எங்களது பதவிக்காலம் முடிவதற்குள் விரைவில் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்” என்று உறுதியளித்தார்.

இதுகுறித்து நடிகர் விஷால் பேசிய கருத்துகளை இந்த வீடியோவில் பார்க்கவும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com