தொடர் சர்ச்சைக்கு உள்ளாகும் நடிகர் விநாயகன் - நள்ளிரவில் கோயிலுக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு!

பிரபல மலையாள நடிகரும், ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ மிரட்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவருமான விநாயகன் தொடர்ந்து பல்வேறு அத்துமீறலில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
Actor Vinayakan
Actor Vinayakanpt desk

செய்தியாளர்: மனு

மலையாள நடிகரான விநாயகன் தொடர்ந்து சர்ச்சைக்குரிய விஷயங்களில் சிக்கி வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு சர்ச்சை சம்பவத்தில் சிக்கியுள்ளார்.

Actor Vinayakan kerala former cm
Actor Vinayakan kerala former cmpt desk

கடந்த திங்கட்கிழமை இரவு கல்பாத்தி கோயிலுக்குச் செல்ல நடிகர் விநாயகன் வந்தார். அப்போது கோயில் நடை சாத்திய நிலையில், விநாயகன் கோயிலுக்குள் நுழைய முயன்றுள்ளார். ஆனால், உள்ளூர் மக்கள் அவரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து அங்கு வந்த போலீசார், விநாயகனை சமாதானம் செய்து திருப்பி அனுப்பினர்.

Actor Vinayakan
தமிழகத்தில் அதிரடியாக குறைந்த மின் தேவை.. இப்படி மழை பெய்ஞ்சா இருக்காதா பின்ன!!

இதைத் தொடர்ந்து சாதி பாகுபாடு காரணமாக விநாயகனை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை என ஒரு பிரிவினர் குற்றம்சாட்டினர். ஆனால், அத்தகைய செய்தி போலியானது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் கோவிலுக்குள் நுழைய வேண்டாம் என கூறியதாகவும், இது கோயில் நடைமுறை, வேறு எந்த பிரச்னையும் இல்லை என்றும் கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Actor Vinayakan in jailer Movie
Actor Vinayakan in jailer Movie
Actor Vinayakan
“மற்றவர்களை கவனிப்பது என் வேலைஇல்லை; இந்த 35 நாட்களில்..”-ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இளையராஜா!

இந்நிலையில், அய்யங்காளியையும், ஐயங்காரையும் பிரித்து மோத வைத்து இனிமேல் குடும்பம் நடத்த முயற்சிக்க முடியாது என இந்த கோயில் விவகாரத்தில் எழுந்த சர்ச்சைகளுக்கு முகநூலில் ஒரு பதிவு மூலம் விநாயகன் பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com