\
நடிகர் விக்ரம் மகன் ஜாமினில் விடுவிப்பு

நடிகர் விக்ரம் மகன் ஜாமினில் விடுவிப்பு

நடிகர் விக்ரம் மகன் ஜாமினில் விடுவிப்பு
Published on

கார் விபத்து வழக்கில் நடிகர் விக்ரம் மகன் துருவ் கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

நடிகர் விக்ரமின் மகன், துருவ். இவர் தெலுங்கில் ஹிட்டான ’அர்ஜூன் ரெட்டி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடத்துவருகிறார். ’வர்மா’ என்ற இந்தப் படத்தை பாலா இயக்கியுள்ளார்.

இந்நிலையில், அவர் தனது நண்பர்கள் 3 பேருடன் காரில் சென்றுகொண்டிருந்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் வீடு அருகே சென்றபோது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 3 ஆட்டோக்கள் சேதமடைந்தன. ஒருவர் படுகாயம் அடைந்தார். 

இதையடுத்து காரில் இருந்தவர்கள் ஓடிவிட்டனர். காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது கால் முறிந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடியவர்களில் வருண் என்பவரை அங்குள்ளவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 


விபத்து பற்றி விசாரித்த போலீசார் விக்ரம் மகன் துருவ் மீது, அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல் என்பது உட்பட இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து செய்தனர். பின்னர் அவரை ஜாமினில் விடுவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com