தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்முகநூல்

”தவெக தலைவர் விஜய் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும்” - சுவரொட்டிகள் மூலம் விருப்பம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று, அந்தக் கட்சியின் நிர்வாகிகள் சுவரொட்டிகள் மூலமாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று, அந்தக் கட்சியின் நிர்வாகிகள் சுவரொட்டிகள் மூலமாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, வரும் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இதற்கு அழைப்பு விடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அந்தக் கட்சியினர் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள், அம்மாவட்ட விஜய் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தவெக தலைவர் விஜய்
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு

கட்சியின் தலைவர் விஜய், மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுவதாக அதில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. கட்சியின் மதுரை வடக்கு மாவட்டம் - வடக்கு தொகுதி நிர்வாகிகள் இந்த சுவரொட்டியை ஒட்டியுள்ளனர். திரையுலகில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த விஜய்யை, அரசியலுக்கு அழைத்த மதுரை ரசிகர்கள், அவரை, தங்கள் மாவட்டத்தில் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com