கருணாநிதி நலம் குறித்து விசாரிக்க நடிகர் விஜய் காவேரி மருத்துவமனை வருகை

கருணாநிதி நலம் குறித்து விசாரிக்க நடிகர் விஜய் காவேரி மருத்துவமனை வருகை

கருணாநிதி நலம் குறித்து விசாரிக்க நடிகர் விஜய் காவேரி மருத்துவமனை வருகை
Published on

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நடிகர் விஜய் காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் நேரடியாக சந்தித்து நலம் விசாரித்தனர். இதுதவிர தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நடிகர் விஜய் காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்கலாம் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com