விஜய் சேதுபதிமுகநூல்
தமிழ்நாடு
”மற்ற மொழிகளை நாட வேண்டிய தேவை வேண்டாமே..” பான்கார்டு குறித்து விஜய் சேதுபதி முன்வைத்த கோரிக்கை!
பான்கார்டு குறித்து விஜய் சேதுபதி முன்வைத்த கோரிக்கை என்ன பார்க்கலாம்.
பான்கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம் தமிழில் இருக்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
வருமான வரித்துறை சார்பில் மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கில் வரி செலுத்துவோருக்கான சிறப்பு மையம் அமைக்கப்பட்டு, வரி செலுத்துவதில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
மேலும் , வருமான வரி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இந்த மையத்தை நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார்.
அப்போது ரசிகர்கள் அவரை சூழ்ந்துக்கொண்டு, செல்பி எடுத்தனர்.