"மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றி புதுச்சேரி சிறுமி படுகொலை; நெஞ்சைப் பதற வைக்கிறது" - விஜய் கண்டனம்!

"சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும்" என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது எக்ஸ் தளத்தில் வருத்தமாக பதிவு போட்டுள்ளார்.
 தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் PT WEB

புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி, வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலையாளிகளைப் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி சிறுமியின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து கருத்துக்களைப் பதிவு செய்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார்.

அந்த பதிவில், "புதுச்சேரி, முத்தியால் பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் என குறிப்பிட்டு விஜய் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com