கருணாநிதியின் உடல்நிலை குறித்து நடிகர் விஜய் நலம் விசாரிப்பு

கருணாநிதியின் உடல்நிலை குறித்து நடிகர் விஜய் நலம் விசாரிப்பு

கருணாநிதியின் உடல்நிலை குறித்து நடிகர் விஜய் நலம் விசாரிப்பு
Published on

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நடிகர் விஜய் காவேரி மருத்துவமனை சென்று நலம் விசாரித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் நேரடியாக சந்தித்து நலம் விசாரித்தனர். இதுதவிர தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நடிகர் விஜய் காவேரி மருத்துவமனைக்கு காலை 10 மணியளவில் சென்றார். பின்னர் மு.க.ஸ்டாலினிடம் உள்ளிட்டோரிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த நடிகர் விஜய் 10.15 மணியளவில் அங்கிருந்து கிளம்பிவிட்டார். மருத்துவமனைக்கு சிறிய ஆல்டோ காரில் நடிகர் விஜய் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com