
நடிகரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை நடிகர் வடிவேலு இன்று நட்பு ரீதியாக நேரில் சந்தித்துப் பேசினார். நேரில் சந்தித்த அவர், உதயநிதிக்கு பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.