தமிழ்நாடு
முழுநேர அரசியலில் களமிறங்குகிறேன்: டி.ராஜேந்தர் பேட்டி
முழுநேர அரசியலில் களமிறங்குகிறேன்: டி.ராஜேந்தர் பேட்டி
நடப்பு 2017ம் ஆண்டில் முழுநேர அரசியலில் களமிறங்க இருப்பதாக லட்சிய திமுகவின் தலைவரும், நடிகருமான டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வலியுறுத்தி பத்து நிமிட மவுன போராட்டத்துக்கு நடிகர் சிம்பு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து சென்னை தி.நகரிலுள்ள அவரது வீட்டு முன்பாக நூற்றுக்கணக்கானோர் இன்று கூடினர். போராட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிம்புவின் தந்தையும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர், சிம்புவின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார். மேலும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டிய டி.ஆர்., இந்தாண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.