நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் உடல்நல குறைவரால் காலாமானர். இந்நிலையில் அவரது மறைவுக்கு அவரோடு நெருங்கி பழகிய நடிகர்களில் ஒருவரான நடிகர் தியாகராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், “இன்று காலையில் என்னை ஒரு அதிர்ச்சியான செய்தி எழுப்பியது.அதிலிருந்து மீள்வதற்கு சிறிது நேரம் ஆகியது. விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர்.மனித நேயம் கொண்டவர்.தமிழ் மீது அதீத பற்று கொண்டவர்.சினிமா துறைக்காக நற்செயல்கள் பல செய்த மாமனிதர்.
புதிது புதிதாக இயக்குநர்கள் பலரை உற்சாகப்படுத்தும் விதமாக அதற்காக தனது அலுவலகத்திலேயே ஒரு குழுவினை அமைத்து அவர்களுக்கு உணவு அளித்து நல்ல கதைகளை கேட்டு அவர்களுக்கு வாப்பு அளித்த மாமனிதர்.
திரைப்பட கல்லூரியில் இருந்து வரும் மாணவர்கள் பலரை ஊக்குவித்து தமிழ் திரையுலகிற்கு புதிய இயக்குநர்கள் பலரை அறிமுகப்படுத்தியவர் அவர்.யாருக்கும் இந்த அளவு துணிச்சல் வராது.அதிலும் ஒரு வருடத்திலும் 14 படங்கள் நடித்து வெளியிடுவார். இது மிகப்பெரிய ஒரு சாதனை. இதற்கு காரணம் அவர் இயக்குநர்களை அணுகிய முறைதான்.” என்று உருக்கமாக பதிவு செய்தார்.