இசையமைப்பாளர் தேவா மறைவு! இரங்கல் தெரிவிக்காத அஜித்? தம்பி ராமையாவின் ஓபன் பதில்!
செய்தியாளர் - கார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்த தேனிசைத் தென்றல் தேவா, கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி அன்று, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். எளிய மக்களின் இசையான கானாவை திரையுலகில் கொண்டு வந்து பெரும் மாற்றத்தை கொண்டு வந்த தேவாவின், இறப்பு செய்தி கேட்டு, பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தனர். முதலமைச்சர் விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் கமல் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், நடிகர் அஜித்குமாரும், இசையமைப்பாளர் இளையராஜாவும், தேவாவின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என்று, இணையத்தில் பெரும் விமர்சனங்கள் எழுந்தது.
குறிப்பாக, ஆசை, வான்மதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, வாலி, ஆனந்த பூங்காற்றே, முகவரி, ரெட் உள்ளிட்ட பல்வேறு ஹிட் ஆல்பங்களை தந்து, சினிமாவில் வளர உதவிய தேவாவின் இறப்புக்கே, அஜித் இரங்கல் தெரிவிக்கவில்லை என்றும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதுமட்டுமின்றி, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நடிகர் விவேக், கேப்டன் விஜயகாந்த் ஆகியோரின் இறப்புக்கும், அஜித் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று கூறி, பழைய சம்பவங்களை தோண்டி எடுத்து, நெட்டிசன்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இப்படியான சூழ்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் தம்பி ராமையா, இந்த விவகாரம் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அதாவது, “அஜித்தும், இளையராஜாவும் தேவாவின் குடும்பத்தினரிடம் இரங்கல்களை தெரிவித்திருக்கலாம். பொதுவெளியில் வருத்தங்களை தெரிவிப்பது தான் சரி என்று சொல்ல முடியாது. அவர்கள் எந்த மாதிரியான சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பது நமக்கும் தெரியாது. வெளிநாட்டில் இருப்பதால், செல்போனில் கூட, அஜித் இரங்கல் தெரிவித்திருக்கலாம். எனவே, உண்மை என்னவென்று தெரியாமல், நாமே எதையாவது பேச வேண்டாம்” என்று பதில் அளித்தார்.

