‘பக்கத்து வீட்டுக்காரருடன் தகராறு.. பாஜகவில் சேரப்போகிறேன்’ - தாடி பாலாஜியின் மனைவி பேட்டி

‘பக்கத்து வீட்டுக்காரருடன் தகராறு.. பாஜகவில் சேரப்போகிறேன்’ - தாடி பாலாஜியின் மனைவி பேட்டி
‘பக்கத்து வீட்டுக்காரருடன் தகராறு.. பாஜகவில் சேரப்போகிறேன்’ - தாடி பாலாஜியின் மனைவி பேட்டி

லஞ்சம் கேட்டு கொடுக்காததால் போலீசார் தன்னை கைது செய்ததாக தாடி பாலாஜியின் மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் சாஸ்திரி நகர் தெருவில் வசித்து வரும் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்தியாவுக்கும், வீட்டருகே வசித்து வரும் ஓய்வுபெற்ற ஆசிரியர் மணி என்பவருக்கும் இடையே சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி மணியின் காரை நித்தியா கற்களால் சேதப்படுத்தியதாக சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் நித்தியா மாதவரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து புனையப்பட்ட சிசிடிவி காட்சியை வெளியிட்டு தன் மீது பொய்யாக வழக்குபதிவு செய்துவிட்டதாக கூறி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நித்தியா, கடந்த ஒரு வாரமாக எதிர்வீட்டுகாரரான மணி என்பவருடன் கார் பார்க்கிங் பிரச்சனை நிலவி வந்ததாகவும், இதனால் தொடர்ந்து தன்னையும், தனது குழந்தையும் இழிவான வார்த்தைகளால் மணி குடும்பத்தினர் திட்டி வந்ததாக அவர் கூறினார்.

மணியின் காரை தான் கற்களால் சேதப்படுத்தியதாக வந்த சிசிடிவி காட்சிகள் புனையப்பட்டவை என்று பேசிய அவர், ‘துணிவு’ படம் பார்த்துவிட்டு நள்ளிரவில் செல்லும் போது, அங்கு சாவி கீழே விழுந்ததால் அதை தேடியதாகவும் அவர் கூறினார். மேலும் பேசிய அவர், புனையப்பட்ட சிசிடிவி காட்சியை காண்பித்து மணி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னிடம் அதிகப்படியான பணத்தை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தர மறுத்ததால் தனது பெயரை களங்கப்படுத்த அவர்கள் காவல் நிலையத்தில் பொய்யான புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நடிகர் தாடி பாலாஜியுடன் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பான வழக்குகளில் காவல்துறைக்கு எதிராக செயல்பட்டதாகவும் அப்போது போலீசாருக்கு லஞ்சம் கொடுக்காததால் காவல்துறையினர் பழிவாங்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பின்போது பெண்கள் மேம்பாடு, பெண் தலைவர்களை பற்றி பேசி பாஜகவில் சேரப் போவதாக நித்தியா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com