சர்வாதிகார, சனாதன சங்கிலிகளை எல்லாம் நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்விதான் - கமல்ஹாசன்..!
சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் அகரம் கல்வி அறக்கட்டளையின் 15வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் அறக்கட்டளையின் நிறுவனர் சூர்யா, நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி, கமல்ஹாசன், நடிகை தேவயானி, இயக்குனர் வெற்றிமாறன், இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், சர்வாதிகார சங்கிலிகளை, சனாதன சங்கிலிகளை எல்லாம் நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்விதான் என்று தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து தெரிவித்த அவர், " இந்த மேடையில் பார்த்த டாக்டரை அடுத்த வருடம் பார்க்க முடியாது. இப்போதைய டாக்டர்கள் மாதிரி அடுத்த ஆண்டு விழாவில் டாக்டர்களை காட்ட முடியமா? என்பதில் சின்ன சந்தேகம் உள்ளது.ஏனென்றால் 2017 க்கு பிறகு இவர்களால் இந்த முயற்சியை தொடர முடியவில்லை. இப்போது புரிகிறதா? ஏன் நீட் வேண்டாம் என்கிறோம் என்று. 2017ம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை கல்வி கிடைக்காமல் செய்துவிட்டது இந்த சட்டம். அகரம் நினைத்தால் ஒன்று செய்ய முடியாது. அந்த சட்டத்தை மாற்றி எழுதக்கூடிய பலத்தை தருவது கல்விதான்.
அந்த கல்வி இந்த போரில் ஆயுதமின்றி நாட்டையே செதுக்கவல்லது.
சர்வாதிகார சங்கிலிகளை, சனாதன சங்கிலிகளை எல்லாம் நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்விதான்.
இதை தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள். அதில் வெல்ல முடியாது. ஏனென்றால் பெரும்பான்மை உங்களை தோற்கடித்துவிடும். பெரும்பான்மை மூடர்கள் உங்களை தோற்கடித்து விடுவார்கள். அறிவு தோற்றுப்போய்விடும். இதை தாங்கி பிடிக்க வேண்டும். நின்று ஆண்டு கொண்டு இருப்பது தலைமை அல்ல. அதை புரிந்து கொள்ள எனக்கு 70 வயது ஆகிவிட்டது. இப்போது நான் சொல்கிறேன். நேற்று நான் முதலமைச்சருடன் பேசி கொண்டிருந்தேன். இந்த என்ஜிஓக்களை பெரிதாக ஆதரிக்க வேண்டும். அவர்கள் பண உதவி கேட்பது இல்லை. அனுமதி கேட்கிறார்கள்.
அதில் நமக்கு என்ன வலிக்க போகிறது என்று கூறினேன். கொடுத்துருங்க அய்யா என்றேன். அதற்கு அவர் செய்து கொண்டு இருக்கிறோம் என்றார். நாங்கள் செய்யத்தான் போகிறோம்.. செய்துகொண்டிருக்கிறோம் என்றார். அந்த பெருமையோடு தான் இங்கு வந்தேன். இதே திட்டத்தை பார்த்து அரசுக்கு ஐடியா வந்தால் அதில் தப்பு கிடையாது. நல்ல திட்டம் எதிரியிடம் இருந்தாலும் கேட்கலாம். இவர் நம்ம பிள்ளை (சூர்யாவை கைகாட்டினார்). இங்கிருந்து எடுக்காமல் எங்கிருந்து எடுப்பது. ஆக, அரசு பெரிய திட்டத்தை அறிவித்து இருக்கிறது. அதில் எனக்கும், உங்களுக்கும் பங்கு உண்டு.” என்று தெரிவித்துள்ளார்.
என்னோட நன்றியுணர்வும் உங்க விடாமுயற்சியும்தான் அகரம் - சூர்யா
“என்னோட நன்றியுணர்வும் உங்க விடாமுயற்சியும்தான் அகரம்... இந்த அழகான பயணத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டதற்கு நன்றி