actor SooriPT
தமிழ்நாடு
”இந்த தப்பு ஏன்..எப்படி? வந்தது என்று தெரியவில்லை” வாக்களிக்க முடியாமல் திரும்பிய நடிகர் சூரி வேதனை!
மக்களவை தேர்தல் நடந்துக்கொண்டிருக்கும் சூழலில் நடிகர் சூரி வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால் வாக்காளர் பெயர் பட்டியலில் அவரது பெயர் இல்லாததால் அவரால் வாக்களிக்க முடியவில்லை.
மக்களவை தேர்தல் நடந்துக்கொண்டிருக்கும் சூழலில் நடிகர் சூரி வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால் வாக்காளர் பெயர் பட்டியலில் அவரது பெயர் இல்லாததால் அவரால் வாக்களிக்க முடியவில்லை. என்ன ஆச்சு? ஏன் வாக்களிக்க முடியவில்லை என்பதை தெரிந்துக் கொள்ள நடிகர் சூரியிடம் பேசினோம்.
”ஒரு பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஒரு ஜனநாயக உரிமையை ஒரு கடமையை நிறைவேற்ற சென்ற சமயம், எனது பெயர் வாக்காளார் பெயர் பட்டியலில் இல்லை என்றதும் எனக்கு வருத்தமாக இருந்தது. அதே சமயம் எனது மனைவியின் பெயர் இருந்தது. அவர் ஓட்டு போட்டார். ஆனால் என்னால் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. இந்த தப்பு, ஏன்? எப்படி வந்தது என்று தெரியவில்லை. ” என்றார்.