"விஜயகாந்த் ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல" - நடிகர் சூரி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் உருக்கம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சூரி, கீர்த்தி சுரேஷ் மற்றும் கஸ்தூரி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த்PT

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திரைப்பட பிரபலங்கள், தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் எனப் பலரும் நேரில் சென்றும், சமூகவலைத்தளங்கள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கீர்த்திசுரேஷ்  எக்ஸ் தள பதிவு
கீர்த்திசுரேஷ் எக்ஸ் தள பதிவு

அந்த வகையில் நடிகர் சூரி தன்னுடைய முகநூல் பக்கத்தில் விஜயகாந்த்திற்கு இரங்கல் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார், அதில், "கடையேழு வள்ளல்களை நாம் பார்த்ததில்லை. ஆனால் கேப்டன் விஜயகாந்தை பார்த்து இருக்கிறோம். மாமனிதன், உதவின்னு யார் கேட்டாலும் வாரி வழங்கிய கர்ணன். ஒரு காலத்தில் அவர் ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல. எளியவர்கள் எல்லாருக்கும் பசி போக்கும் அன்னச்சத்திரமா இருந்துச்சு. தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை விஜயகாந்த் சாரின் புகழ் இருக்கும். கேப்டனின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜயகாந்த்
"விஜயகாந்த்தின் கோபம் குழந்தையின் கோபத்திற்குச் சமம்" - தமீமுன் அன்சாரி உருக்கம்!
நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் தள பதிவு
நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் தள பதிவு

விஜயகாந்த் மறைவு குறித்து நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் தளத்தில், "கருப்பு வைரம் விஜயகாந்தின் கரங்கள் மட்டும் சிவப்பு. கொடுத்துக் கொண்டே இருந்ததினால் கொடுத்து விட்டே இறந்ததினால் வெள்ளை சிரிப்பு உள்ளமோ பொன் கொடையில் கர்ணன் வீரத்தில் அர்ஜுனன் இனி ஒரு கேப்டனை எங்குக் காண்போம்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் தளத்தில், " எப்போதும் எங்கள் இதயங்களில் நிம்மதியாக இருங்கள் கேப்டன் விஜயகாந்த் சார்" எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜயகாந்த்
"ஒளிஞ்சி ஒளிஞ்சி உன்னோட படம் பார்த்தேனே கருப்புசாமி"-விஜயகாந்த் போஸ்டரை பார்த்து கதறி அழுத மூதாட்டி!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com