\
வறுமையில் வாடும் மூத்த கலைஞர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசளித்த நடிகர் சிவக்குமார்

வறுமையில் வாடும் மூத்த கலைஞர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசளித்த நடிகர் சிவக்குமார்

வறுமையில் வாடும் மூத்த கலைஞர்களுக்கு இருசக்கர வாகனம் பரிசளித்த நடிகர் சிவக்குமார்
Published on

தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற புலவர். செந்தலை. ந.கவுதமனுக்கும், கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற சூலூர் கலைப்பித்தனுக்கும் நடிகர் சிவக்குமார் மோட்டார் சைக்கிள்களை பரிசளித்தார்.

தமிழக அரசு வழங்கிய பாரதிதாசன் விருது பெற்றவர் புலவர்.செந்தலை கவுதமன் (69). இவர் வறுமையின் காரணமாக சைக்கிளில் தான் சென்று கொண்டிருக்கிறார். அதேபோல் தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்றவர் சூலூர் கலைப்பித்தன். இவர், 1983 மற்றும் 1986-ஆம் ஆண்டுகளில் நடிகர் சிவகுமாரை வைத்து 2 படங்களை எடுத்துள்ளார்.

சூலூர் கலைப்பித்தன் முதியோர் பென்சனை வைத்துக் கொண்டு ஓட்டு வீட்டில் குடியிருந்து வருவதோடு பேருந்தில் சலுகை கட்டணத்தில் சென்று கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரது வறுமையையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் நோக்கோடு அவர்கள் இருவருக்கும் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களை நடிகர் சிவக்குமார் பரிசளித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com