சிகிச்சைக்கு பண உதவி செய்யுங்க... வீடியோ வெளியிட்ட நடிகர் வெங்கல்ராவுக்கு உடனடியாக உதவிய சிம்பு!

நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் சிம்பு 2 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.
Simbu Venkal rao
Simbu Venkal raopt desk

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த தமிழ் திரைப்பட காமெடி நடிகர் வெங்கல் ராவ், தனக்கு கை, கால் செயலிழந்து உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய மேல் சிகிச்சைக்காக பண உதவி வழங்குமாறும் வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார்.

Actor venkal rao
Actor venkal rao

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சண்டை கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கி 20 வருடங்களாக சண்டை கலைஞராக பணியாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து நடிகர் வடிவேலு உடன் இணைந்து சிறு சிறு காமெடி பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிய வெங்கல் ராவ், தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Simbu Venkal rao
“அண்ணன் Vijay முதல்வரானால் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்” - Loyola Mani!

உடல் நலக் குறைவால் ஆந்திராவில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வரும் வெங்கல் ராவின் மருத்துவ சிகிச்சைக்காக திரைப்பட நடிகர்கள் பலரும் உதவி கரம் நீட்டி வரும் நிலையில், நடிகர் சிம்பு இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.

உடனடியாக உதவிக்கரம் நீட்டிய நடிகர் சிம்புவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com