"உதயநிதியின் துணிச்சல்" - மனம்திறந்து பேசிய சத்யராஜ்!

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு, நடிகர் சத்யராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு குறித்த பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பலை உருவாகியது. தொடர்ந்து அவருக்கு எதிராகக் கண்டனப் பதிவுகளும், வழக்குப் பதிவுகளும் பாய்ந்தபடி உள்ளன. அதேநேரத்தில் அவருக்கு ஆதராகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இதுகுறித்து நடிகர் சத்யராஜ், “அமைச்சர் உதயநிதி தெளிவாகப் பேசியுள்ளார். அவருடைய சிந்தனை மற்றும் கருத்தியல்ரீதியான தெரிவு, துணிச்சல், கையாளும் விதம் ஆகியன எனக்குப் பெருமையாக இருக்கிறது. அதற்காக அவருக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com