சென்னை ஆர்.கே.நகரில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் மருது கணேசை வழியில் சந்தித்த நடிகர் சரத்குமார் இந்த சந்திப்பு தற்செயலானது என்றார்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளர் காசி மேடு மீன்பிடித் துறைமுகம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக மீனவர் பிரச்னை குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், மருதுகணேசைச் சந்தித்தார். இருவரும் பேசிக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், மருதுகணேஷுடனான சந்திப்பு தற்செயலானது எனத் தெரிவித்தார். மேலும், தான் மீனவர்களின் பிரச்னைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டதாகவும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களது நிலைப்பாட்டை இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்க இருப்பதாகவும் கூறினார். அதேபோல், திமுக வேட்பாளர் மருது கணேஷ், தன்னைப் போல் சாமானியனுக்கு தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பளித்ததால் ஏராளமான இளைஞர்கள் திமுகவில் சேர வாய்ப்பிருப்பதாகக் கூறினார்.