“கலப்படம் இல்லாத உண்மையை எழுதுங்கள்” - குட்டிக்கதை சொல்லிய ரஜினி

“கலப்படம் இல்லாத உண்மையை எழுதுங்கள்” - குட்டிக்கதை சொல்லிய ரஜினி
“கலப்படம் இல்லாத உண்மையை எழுதுங்கள்” - குட்டிக்கதை சொல்லிய ரஜினி

துக்ளக் விழாவில் குட்டிக்கதை ஒன்றினை கூறி பத்திரிகையாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.

துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். வெங்கையா நாயுடு வெளியிட்ட சிறப்பு மலரை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

பின்னர் விழாவில் பேசிய ரஜினி, நடுநிலையான பத்திரிகைகள் கலப்படம் இல்லாத உண்மையை எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், குட்டிக் கதை ஒன்றினை கூறினார். அதில், “ஒரு கிராமத்தில் ஒரு பால் கடை இருந்தது. கடைக்காரர் கலப்படம் இல்லாத தூய்மையான பாலினை ஒரு லிட்டர் 10 ரூபாய்க்கு விற்று வந்தார். நல்லவர் இருந்தால் விடமாட்டார்கள் அல்லவா ? அப்போது, இன்னொருவர் அங்கு கடை வைத்தார். பாலில் கொஞ்சம் தண்ணீர் கலந்து ஒரு லிட்டர் 8 ரூபாய்க்கு அவர் விற்றார். விலை குறைவாக இருந்ததால் மக்கள் 8 ரூபாய் பாலினை வாங்கினார்கள். தரத்தினை பார்க்கவில்லை.

ஒரு ஏமாற்றுக்காரனை ஏமாற்ற மற்றொரு ஏமாற்றுக்காரன் இருப்பான் இல்லையா. மற்றொருவர் வந்து இன்னும் அதிகமாக தண்ணீர் கலந்து ஒரு லிட்டரை 6 ரூபாய்க்கு விற்றார். இருப்பினும், அந்த நேர்மையான கடைக்காரர் கலப்படம் இல்லாத பாலினை 10 ரூபாய்க்கே விற்று வாழ்ந்து வந்தார்.

அப்போது அந்த ஊரில் விழா ஒன்று வந்தது. மக்கள் எல்லோரும் கடையில் உள்ள 6 ரூபாய், 8 ரூபாய் பாலினை வாங்கிவிட்டனர். மேலும், தேவை ஏற்பட்டதால், 10 ரூபாய்க்கு விற்ற பாலினை வாங்கினார்கள். 10 ரூபாய் பாலில் செய்த பலகாரங்கள் சுவையாக இருந்தன. அதனால், மக்கள் உண்மையை உணர்ந்து 10 ரூபாய் பாலினையே வாங்க ஆரம்பித்தார்கள். 8 ரூபாய், 6 ரூபாய் பால் கடைகள் காணாமல் போய்விட்டன. எனவே, உண்மையை எழுதுங்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com