ரஜினிக்கு ஆளுநர் பதவி? - சகோதரர் சத்யநாராயணன் சொன்ன பதில்!

”ரஜினிக்கு ஆளுநர் பதவி என்பது ஆண்டவன் முடிவுதான்” என அவருடைய சகோதரர் சத்யநாராயணன் தெரிவித்துள்ளார்.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகருடைய இல்ல திருமண விழாவிற்கு அவருடைய சகோதரர் சத்யநாராயணன் வருகை தந்தார். பின்னர் மேடையில் ஏறி மணமக்களுக்கு மாலை அணிவித்து ஆசீர்வதித்தார். தொடர்ந்து ரஜினியின் ரசிகர் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

சத்யநாராயணன், ரஜினி
சத்யநாராயணன், ரஜினிகோப்புப்படம்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சத்யநாராயணன், ”நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார்” என்றார். அப்போது அவரிடம் ‘ரஜினிகாந்துக்கு ஆளுநர் பதவி கிடைக்குமா’ என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், ”அது ஆண்டவன் முடிவுதான்” என பதிலளித்தார். ரஜினி -ஓபிஎஸ் சந்திப்பு குறித்த கேள்விக்கு, ”அதில் எதுவும் அரசியல் இல்லை” என தெரிவித்தார்.

முன்னதாக, ’ஜெயிலர்’ திரைப்படத்தின் 25ஆவது நாளை கொண்டாடும் விதமாகவும், ரஜினி நல்ல ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ வேண்டியும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ரஜினி ரசிகர்களுடன் இணைந்து சாமி தரிசனம் செய்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com